சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலில் மண் மற்றும் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும், கழிவுநீர் கால்வாயை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.