திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் வாழவந்தான்கோட்டை கனகவேல் அவென்யூ 3-வது தெருவில் சாக்கடை கால்வாய் பாதி அளவு அமைக்கப்பட்ட நிலையில், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை வீரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.