சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2026-01-04 18:20 GMT

ஏற்காடு சந்தைப்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் சுற்றுலா பயணிகள் தின்பண்டங்களை வாங்குவதற்காக வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையிலேயே தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து கொண்டே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்காடு முழுவதும் உள்ள கடைகளில் கழிவுநீர் முறையாக செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும், ஏற்கனவே சாலைகளில் உள்ள கழிவுநீரை அகற்றவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்