விக்கிரமசிங்கபுரம் அருகே அடையகருங்குளம் பஞ்சாயத்து அகஸ்தியர்பட்டி விநாயகர் காலனி 3-வது தெருவில் வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் தெருவில் தேங்குவதால் சுகாதாரக்கேடாக உள்ளது. எனவே வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.