குலசேகரம் அரசமூடு பகுதியில் சிற்றாறு பட்டணங்கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாயில் அப்பகுதியை சேர்ந்த சிலர் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் கால்வாயில் கழிவுகள் தேங்கி தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் சுகாதார கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. கால்வாயினை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த கழிவுகளை அகற்றி, கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.