பறக்கை செட்டித்தெரு பிள்ளையார் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் சாலையோரம் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த கழிவுநீர் ஓடை பல மாதங்களாக தூர்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி காணப்பட்டது. பின்னர் அதிகாரிகளிடம் முறையிட்ட பின் ஓடையை சுத்தப்படுத்தினர். ஆனால் அந்த கழிவுகளை உடனடியாக அகற்றாமல் அதன் அருகிலேயே போட்டுவிட்டனர். இது நாள் வரையும் அகற்றப்படவில்லை. மேலும், துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே, அதிகாரிகள் கழிவுகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.