சுகாதார சீர்கேடு

Update: 2026-01-04 11:41 GMT

தஞ்சை கரந்தை பகுதி அன்பழகன்நகர் விரிவாக்க பகுதியில் பாதாள சாக்கடை குழி உள்ளது. இந்த குழியில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறும் கழிவுநீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. அதில் கொசுகள் அதிகளவில் உற்பத்தியாகிறது. கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை மூடியபடி செல்கின்றனர். மேலும், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்