ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை மகர்நோன்பு பொட்டல் சாலை- காட்டு பிள்ளையார் கோவில் செல்லும் பிரதான சலையில் பாதாள சாக்கடை தொட்டியில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாதசாரிகள், வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடைப்பை சரிசெய்து கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.