கழிவு நிறைந்த கால்வாய்

Update: 2025-12-28 13:02 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூரில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி தெருவில் மழைநீர் வடிகால் கால்வாய் உள்ளது. தற்போது அந்த கால்வாய் முழுவதும் கழிவுநீர், குப்பைகள் ஆக்கிரத்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கடி, நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த சாலையில் செல்லும்போது மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்