சுகாதார சீர்கேடு

Update: 2025-12-28 10:17 GMT

கோவையை அடுத்த சோமையம்பாளையம் ஊராட்சி காளப்பநாயக்கன்பாளையம் ராஜலட்சுமி நகரில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாயில் கழிவுநீர் சீராக செல்வது இல்லை. ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் தேங்கி கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்து. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த கால்வாயில் அடைப்பை நீக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்