கால்வாயில் அடைப்பு

Update: 2025-12-28 10:15 GMT

கோவை மாநகராட்சி 82-வது வார்டுக்கு உட்பட்ட அய்யண்ணன் வீதி சிவன் கோவில் அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. அருகில் உப்பு தண்ணீர் தொட்டி மற்றும் சிறுவாணி குடிநீர் குழாய் உள்ளது. அந்த சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்தோட முடியாமல் அங்கேயே தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்