தொற்று நோய் அபாயம்

Update: 2025-12-21 17:18 GMT

நாமகிரிப்பேட்டையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சமூகநீதி விடுதியும் செயல்பட்டு வருகிறது. சமூகநீதி விடுதியில் 100-க்கும் மேற்பட்டோர் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் விடுதியின் வெளிப்புறத்தில் கழிவுநீர் வெளியேறி வருவதால் மாணவ, மாணவிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பள்ளி விடுதி அருகே கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்