கரூர் மாவட்டம், கொங்கு நகர், அம்மன் நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், ஆங்காங்கே இடிந்து சிதிலமடைந்தது. புதிய கால்வாய் கட்டும் பணிக்காக குழி தோண்டப்பட்ட நிலையில், பணிகளை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் குழிகளில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.