சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி, சிவசக்தி நகர், நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கால்வாய் ஒன்று செல்கிறது. இந்த கால்வாய் தூர்வாரப்படாததால் மழைக்காலத்தில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை விரைந்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.