நிரம்பி வழியும் கழிவுநீர் தொட்டி

Update: 2026-02-01 19:10 GMT

கூடலூர் அருகே டி.ஆர். பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 100 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கழிவுநீர் தொட்டி 2 ஆண்டுகளாக நிரம்பி வழிகிறது. பலமுறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் இதுவரை சரி செய்யவில்லை. அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் மழைநீர் வகுப்பறைக்குள் புகுவதால் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்