அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் அழகியமணவாளம் ஊராட்சிக்குட்பட்ட கீலவரப்பங்குறிச்சி மாதா கோவில் தெருவில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. தற்போது இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதுடன், குடிநீரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.