சாலையில் ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி

Update: 2026-02-01 19:34 GMT

அணைக்கட்டு தாலுகா பொய்கை பஸ் நிறுத்தத்தில் கால்வாயில் இருந்து கழிவுநீர் கசிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் அப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாகச் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர், பஸ் பயனாளிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிப்படுகின்றனர். சாலையில் ஓடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுசம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரவீன், பொய்கை.

மேலும் செய்திகள்