காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கரசமங்கலம் கூட்ரோடு பாரதிநகர் பகுதியில் கழிவுநீர் சாலையில் வெளியேற்றப்படுகிறது. கழிவுநீர் ஆண்டுக்கணக்கில் குட்டையாகத் தேங்கி, சுகாதாரச் சீர்கேட்டை உண்டாக்கி வருகிறது. இதை உடனடியாக அகற்றி, சுகாதாரத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமாரசாமி, லத்தேரி.