சுகாதார சீர்கேடு

Update: 2026-02-08 07:02 GMT

நாகர்கோவில் மாநகராட்சியில் கிறிஸ்டோபர் காலனி உள்ளது. இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையை முறையாக தூர்வாரி பராமரிக்காமல் காணப்படுகிறது. இதனால், ஓடையில் குப்பைகள் தேங்கி கழிவுநீர் வடிந்தோடாமல் தேங்கி காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை தூர்வாரி தண்ணீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்