திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 65-வது வார்டுக்குட்பட்ட சி.கே.பி. கார்டன் திருக்குறள் வீதியில் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்புவாசிகளை தீண்டி வருகிறது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.