தியாகதுருகம் அருகே புக்கிரவாரி ரெயில் நிலையத்தில் கழிவறை வசதி ஏற்படுத்தித்தரப்படவில்லை. இதனால் ரெயில் ஏற வரும் பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே ரெயில் நிலையத்தில் கழிப்பறை கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.