சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மெயின்ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே (பழைய தமிழ்நாடு கிராம வங்கி தெரு) சிமெண்டு சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயை மூடிபோட்டு மூடப்பாடமல் உள்ளது. மேலும் அப்பகுதியில் மின்விளக்குகளும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் தவறி அந்த கழிவுநீர் கால்வாய்க்குள் தவறி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.