சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி காமராஜர் நகரில் 26 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள காலி இடங்களில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், செடிகளுக்குள் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷசந்துக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், சாலையோரத்தில் மழைநீர் ஓடைகள் அமைக்கப்படாததால் தண்ணீர் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதுடன் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.