‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-12-07 13:14 GMT

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள செம்படாம்பாளையத்தில் கழிவுநீர் செல்ல கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் மழை நேரத்தில் மழை நீரும், கழிவு நீரும் சேர்ந்து சாலைகளில் ஓடும் நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலை ஏற்படும் என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்கால் அமைத்தனர். இதற்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்