சாக்கடை கால்வாய் வேண்டும்

Update: 2025-11-30 16:17 GMT

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு அய்யப்பன் கோவில் அருகே உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வழிந்தோட சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. திறந்தநிலையில் கழிவுநீர் ஓடை தான் இருக்கிறது. அதை அகற்றிவிட்டு சாக்கடை கால்வாய் அமைக்கக்கோரி பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வார்டு பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்