திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் ரெயில் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ரெயில் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராமல் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் ரெயில் நிலையம் வரும் பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய்களை சரிசெய்யவார்களா? என ரெயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.