கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2025-11-23 10:43 GMT

சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு சுள்ளிக்காடு பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஆறு போல் ஓடி வருகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. தற்போது சுள்ளிக்காடு பகுதியில் சேதமடைந்த சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனுடன் சேர்ந்து சாக்கடை கால்வாய் வசதியும் ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்