அரும்பார்த்தபுரம் மணவெளி சாலையில் கழிவுநீர் கால்வாய் தூர்வாராமல் கிடக்கிறது. இதனால் புதர்மண்டி கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மழை காலம் தொடங்கியுள்ளதால் கழிவுநீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.