ஈரோடு அருகே உள்ள வேப்பம்பாளையம் கிராமத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே வேப்பம்பாளையம் கிராமத்தில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.