பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான படிப்பகம் உள்ளது. இதன் அருகே உள்ள சாக்கடை கால்வாய் மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் படிப்பகத்துக்கு வரும் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய்க்கு மூடி அமைக்க வேண்டும்.