உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு ஜெயலானி ராவுத்தர் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடந்தது. ஆனால் அந்தப்பணிகள் தற்போது பாதியில் நிற்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதன்காரணமாக சாக்கடை ஓரமாக உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ெகாசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்குவதோடு பணிகளை முடித்து கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல ஆவன செய்ய வேண்டும்.