பொதுமக்கள் அவதி

Update: 2025-11-09 07:46 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 21-வது வார்டு ஆர்.கே.வி. அவென்யூ மற்றும் ஐவே காலனி இடையில் 18 அடி மழை நீர் கால்வாய் இருந்தது. தற்போது அது 6-அடியாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் அந்த கால்வாயில் முழுமையாக செல்ல முடியாமல் தேங்கி கிடக்கும் அவலம் நீடிக்கிறது. தேங்கிகிடக்கும் நீரால் குடியிருப்பு வாசிகளுக்கு நோய்தொற்று அபாயம் இருக்கிறது. எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்