திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடுபகுதியின் 10-வது வார்டுக்குட்பட்ட துரை தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பாதாள சாக்கடையின் கழிவுகள் பல நாட்களாக அகற்றப்படாமல் இருந்தது. தற்போது அந்த கழிவுகளை அகற்றும் முறையும் அப்பகுதி மக்களை தொற்றுநோய்க்கு நேராக அழைத்து செல்வதாக உள்ளது. திறந்த வெளியில் கொட்டப்பட்ட இந்த கழிவுகளால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். எனவே தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும்.