பாதியில் நிற்கும் பணி

Update: 2025-11-02 15:33 GMT

  கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் 13-வது வார்டில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கால்வாய் கட்டும் பணியை தொடங்கினர். அதன்பின்னர் சுமார் 30 அடி தூரம் கால்வாயை கட்டாமல் அப்படியே பாதியில் விட்டுவிட்டனர். இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே பாதியில் நிற்கும் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்