கடமலைக்குண்டுவை அடுத்த மேலப்பட்டி பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி நிற்பதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.