அரியலூர் மாவட்டம் செந்துறை சிவன் கோவில் தெருவில் உள்ள பழைய ரிஜிஸ்டர் ஆபீஸ் சாலையில் கழிவுநீர் கால்வாய் அகருகே மழைநீர் தேங்கி குளம் காட்சியளிக்கிறது. மழைநீர் கழிவுநீருடன் கலந்து தேங்கியிருப்பதால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.