வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்

Update: 2025-11-02 11:22 GMT

கரூர் மாவட்டம் அண்ணாநகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சாக்கடை கால்வாயில் சுற்றுப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இணைத்து அனுப்பப்படுவதால் மழைக்காலங்களில் சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்