நோய்த்தொற்று பரவும் அபாயம்

Update: 2025-11-02 10:54 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புஞ்சை சங்கேந்தி அய்யனார்புரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் சாலைகளில் குளம் போல் தேங்குகிறது. இந்த மழைநீர் வடிவதற்கு 5 நாட்கள் வரை ஆகிறது. தண்ணீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்துதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்