ராமநாதபுரம் மாவட்டம் கொல்லங்குளம் கிராமம் 3-வது வார்டு முதல் தெருவில் சில நாட்களாகவே சாலையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.