சாவடி அருகே கோண்டூர் அக்ரி நகர் 3-வது தெருவில் சிறுமழை பெய்தால் கூட தண்ணீர் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேதமடைந்த சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டும். மேலும் அங்கு வடிகால் வசதி ஏற்படுத்தித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.