குடியிருப்புகளுக்குள் புகுந்த கழிவுநீர்

Update: 2025-10-26 11:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணம் கிராமத்தில் விஐபி நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், வெளியேற வழியில்லாததால் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும், தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்