புதுக்கோட்டை மாவட்டம் பசுமை நகர் அசோக்நகர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு புதிய கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய் 3 முதல் 4 தெருக்கள் மற்றும் அருகில் உள்ள திருமண மண்டபத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கால்வாய் முறையாக கட்டப்படாததால் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உள்பட அனைத்தும் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.