கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் ஆண்டாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் முறையான கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி, கழிவுநீர் தேங்காமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.