திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, பூபதி நகர் விவேகானந்தர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியின் குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு சாலை வசதி முறையாக செய்யப்படவில்லை. தற்போதுவரை மண் தரையையே பாதையாக பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த பாதை செடி,கொடிகள் வளர்ந்து பயன்படுத்த முடியாமல் உள்ளது. மழைகாலத்தில் அந்த பாதை சகதியாக மாறுவதால் பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய சாலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.