சேதமடைந்த மழைநீர் வடிகால்மூடி

Update: 2025-10-19 11:35 GMT

திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி ஊராட்சிக்குட்பட்ட எல்லை முடிவிலிருந்து அத்திபேடு ஊராட்சி எல்லை ஆரம்பம்வரை மழைநீர் கால்வாய் தொடர்ச்சியாக ஜி.என்.டி. சாலையில் அமைந்துள்ளது. சாலையும் கால்வாயும் சமமான அளவில் உள்ளதால் சிறுமழைக்கே கால்வாய் நிறைந்து மழைநீர் சாக்கடையுடன் கலந்து சாலையை சூழ்ந்துள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமபடுகிறார்கள். மேலும் பல இடங்களில் மழைநீர் கால்வாய் மூடி உடைந்தும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்