சென்னை பட்டாளம் கே.எம்.கார்டன் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் குளம்போல சாக்கடை நீர் தேங்கியுள்ளது. குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் அந்த பகுதிமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மழைகாலம் என்றாலே இந்த பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பது வாடிக்கையாகிவிட்டது. குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலநிலை உள்ளதால் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும், மழைகாலங்களில் நீர் தேங்குவதை தடுக்கவும் மாநகராட்சி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.