மதுரை நகர் வார்டு எண்.77 நல்லமுத்து பிள்ளை காலனியில் கடந்த சில வாரங்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி செல்கின்றது. மேலும் பாதாள சாக்கடையின் மூடியும் உடைந்து இருப்பதால் அதிக கழிவு நீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றது. இதனால் அப்பகுதியை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.