சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-10-12 16:14 GMT

கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள மயானம் அருகில் கக்கன் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்குகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை விரைவாக ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்