கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி பெரியார் நகரில் 1½ ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணியை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டனர். இதனால் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. விஷஜந்துகள் நடமாட வாய்ப்புள்ளது. இவை அருகே உள்ள வீடுகளுக்குள் படையெடுத்துவிடும் என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே செடி, கொடிகளை அகற்றி கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.