அந்தியூர் தவுட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே உள்ள சாக்கடை கால்வாய் கடந்த ஒரு ஆண்டாக திறந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர். கால்வாயில் தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?